Sonntag, 28. Februar 2010

உலகின் அதிவேக கணினி-அமெரிக்கா சாதனை!


அமெரிக்க ஆயுதங்கள் பரிசோதனை மையம் உலகின் அதிவேக கணினியை தயாரித்துள்ளது.

ஒரு வினாடியில் 1000 ட்ரில்லியன் நடவடிக்கைகளை இந்த சாதனைக் கணினி செய்து முடிக்கும் திறன் கொண்டது.

அமெரிக்க எரிசக்தித் துறையும் ஐ.பி.எம். நிறுவனமும் இந்த சூப்பர் கணினி பற்றிய அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

"ரோட்ரன்னர்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கணினி, அமெரிக்காவின் அணு ஆயுதங்கள் கையிருப்பை பராமரிக்கவும், உலக எரிசக்தி நெருக்கடிகளை தீர்க்க உதவவும், மேலும் பல்வேறு அடிப்படை ஆராய்ச்சி மூலம் அறிவுத் துறையை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று எரிசக்தி செயலர் சாமுயேல் போட்மேன் தெரிவித்தார்.

நியூ மெக்சிகோவில் உள்ள 'தி லாஸ் அலமோஸ் நேஷனல் பரிசோதனைக் கூடமும், ஐ.பி.எம். நிறுவனமும் இந்த அதிவேக உலக சாதனை கணினியை வடிவமைக்கும் பணியில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.